தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 6 பேர் கைது


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 3 May 2022 10:30 PM IST (Updated: 3 May 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் வழிப்பாதை பிரச்சினை தொடர்பாக கோரிக்கை மனு அளிக்க வந்த பூதநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் திடீரென தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தடுத்து நிறுத்தினார்கள். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி கொடுத்த புகாரின் பேரில் பூதநத்தத்தை சேர்ந்த இளங்கோ (வயது 58), திலகவதி (31), ராஜேஸ்வரி (36), ஹேமலதா (47), அறிவழகன் (35) ஆகிய 5 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதேபோல் நிலப் பிரச்சினை தொடர்பாக தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற மாதம்மாள் (67) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story