மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்: அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு
மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக புகாரில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி அருகே மிட்டாநூலஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் ரவிச்சந்திரன் (வயது 56). இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலரிடம் தவறான நோக்கத்துடன் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதைதொடர்ந்து ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவிகளிடம் தவறான நோக்கத்துடன் நடக்க முயன்றதாக உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story