கோடை மழையால் பதநீர் தொழில் பாதிப்பு
சாயல்குடி அருகே பல கிராமங்களில் கோடைகால மழையால் பதநீர் இறக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே பல கிராமங்களில் கோடைகால மழையால் பதநீர் இறக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
பனை மரங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் மற்றும் உப்பு உற்பத்தி தொழிலுக்கு அடுத்தபடியாக பதநீர் தொழிலும் அதிகமாகவே நடந்து வருகின்றது. குறிப்பாக மாவட்டத்தில் சாயல்குடி பகுதியை சுற்றிலும் உள்ள பல கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இந்த பனை மரங்களில் இருந்து ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆவணி மாதம் வரையிலும் பதனீர் உற்பத்தி செய்யும் சீசனும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பதனீர் உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கி உள்ளது. சாயல்குடி, நரிப்பையூர், வெட்டுக்காடு, கன்னிராஜபுரம், பூப்பாண்டியபுரம், கடுகு சந்தை, சத்திரம், மாரியூர், காவாகுளம் உள்ளிட்ட பல ஊர் களிலும் பதனீர் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
சீசன்
இதுபற்றி சாயல்குடி அருகே உள்ள பூ பாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்த பனைஏறும் தொழிலாளி காசி கூறிய தாவது:- சாயல்குடியை சுற்றி உள்ள பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பதநீர் உற்பத்தி செய்யும் சீசன் தைமாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையிலும் இருக்கும். தற்போது சீசன் தொடங்கி 2 மாதம் கடந்து விட்டது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கோடைமழையால் பதநீர் இறக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
பனைமரங்கள் மீது ஏறி நன்கு வளர்ந்து நிற்கும் பாலை பகுதியில் சுண்ணாம்பு தடவப்பட்ட மண்பாண்ட கலயத்தை பனை மரத்தில் கட்டி தொங்க விட்டுவிடுவோம். கலயத் திற்குள் விடப்பட்டு உள்ள பாலைக்கு அருகில் வளர்ந்து நிற்கும் பனை ஓலைகளை வெட்டி விடுவோம்.
ஒரு நாளைக்கு 3 முறை இந்த கலயம் கட்டி விடப்பட்டுள்ள பனை மரத்தின் பாலையை வெட்டி சீவி விடுவோம்.
ஒரு நாள் கழித்து பனை மரத்தில் ஏறி கலயத்தில் சேர்ந்திருக்கும் பதநீரை சேகரித்து அதை விற்பனை செய் வோம். பனை ஓலைப் பட்டையில் இந்த பதநீரை ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விற்பனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பதநீர் சீசன் களைகட்டி உள்ளதால் சாயல்குடி அருகே உள்ள மேலச்செல்வனூர் பகுதியில் இருந்து நரிப்பையூர் வரையிலான கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பனை ஓலை மட்டையுடன் அமர்ந்து பதநீர் விற்பனை செய்து வருகின் றனர். இந்த வழியாக செல்லும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சுத்தமான இந்த பதநீரை ஆர்வமுடன் வாங்கி பருகி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story