பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
முககவசம்
கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர தொடங்கியுள்ள நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் ஆயுதமாக திகழ்ந்து வருவது தடுப்பூசி செலுத்துவது மட்டுமே ஆகும். பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கை கழுவுதல் ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்
ரூ.500 அபராதம்
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிகளின்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். மாணவர்களும், ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும்.
திருமணம்- இறுதி சடங்கு
அரசு மற்றும் தனியார் பஸ்களில் அனைத்து பயணிகளும் முககவசம் அணிந்து பயணம் செய்வதை நடத்துனர் கண்காணிக்க வேண்டும். இதை அந்தந்த பணிமனை கிளை மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து வருவதை கோவில் நிர்வாகம் உறுதிபடுத்திட வேண்டும்.
திரையரங்குகளுக்கு செல்வோர் முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.
திருமணம், இறுதி சடங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story