புதா்மண்டி காட்சியளிக்கும் திருமலைராஜன் ஆறு


புதா்மண்டி காட்சியளிக்கும் திருமலைராஜன் ஆறு
x
தினத்தந்தி 3 May 2022 10:51 PM IST (Updated: 3 May 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

குடவாசல் பகுதியில் புதா்மண்டி காட்சியளிக்கும் திருமலைராஜன் ஆற்றை விரைவில் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடவாசல்;
குடவாசல் பகுதியில் புதா்மண்டி காட்சியளிக்கும் திருமலைராஜன் ஆற்றை விரைவில் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருமலைராஜன் ஆறு 
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் ஓடும் காவிரியின் கிளை நதியான திருமலைராஜன் ஆறு பாபநாசத்தில் பிரிகிறது. இந்த ஆறு காரைக்கால் அருகில் உள்ள திருமலைராயன் பட்டினம் அருகே கடலில் கலக்கிறது. இதற்கிடையில் பாபநாசத்தில் இருந்து கடலில் கலக்கும் திருமலைராஜன்பட்டினம் வரை இந்த ஆறு மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. 
தூர்வார கோரிக்கை 
குறிப்பாக குடவாசல் பகுதியில் இந்த ஆற்றின் பாசனம் அதிகம். ஆனால் தற்போது திருமலைராஜன் ஆற்றில் புதர்கள் மண்டி நீர்பாசனத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்  முழு கவனம் செலுத்தி இந்த ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டரமாணிக்கம், சீதக்கமங்கலம், தேதியூர், அதம்பார், நெம்மேலி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story