இறுதி ஊர்வலத்தில் தகராறு 3 பேர் மீது வழக்கு


இறுதி ஊர்வலத்தில் தகராறு 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 May 2022 10:56 PM IST (Updated: 3 May 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

இறுதி ஊர்வலத்தில் தகராறு 3 பேர் மீது வழக்கு


விழுப்புரம்

விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த விஷ்வா என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவருடைய இறுதி ஊர்வலத்தில் அதே பகுதியை சேர்ந்த மணிபாரதி, பிரபாகரன், பிரசாந்த் மற்றும் இர்பான் ஆகியோருக்குள் நடனம் ஆடுவதில் பிரச்சினை ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதை பார்த்த வெங்கடேஷ், அங்கு விரைந்து சென்று அவர்களிடம் சமாதானம் பேசினார். இதில் ஆத்திரமடைந்த மணிபாரதி, பிரபாகரன், பிரசாந்த் ஆகியோர் சேர்ந்து வெங்கடேசையும், இர்பானையும் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின்பேரில், மணிபாரதி உள்ளிட்ட 3 பேர் மீது விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story