தாறுமாறாக ஓடிய லாரி வீட்டில் புகுந்தது;டிரைவர் பலி


தாறுமாறாக ஓடிய லாரி வீட்டில் புகுந்தது;டிரைவர் பலி
x
தினத்தந்தி 3 May 2022 11:28 PM IST (Updated: 3 May 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய லாரி வீட்டில் புகுந்ததில் டிரைவர் பலியானார்.

திண்டிவனம்

செங்கல்பட்டை அடுத்த பழம்பாக்கம் அருகே உள்ள நேத்தாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆசீர்வாதம் மகன் வேளாங்கண்ணி(வயது 37). டிப்பர் லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் மாலை பிரம்மதேசத்தில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றிக் கொண்டு மரக்காணம் மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். 

ஆலங்குப்பம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை மோதி தள்ளி விட்டு சாலையோர வீட்டில் புகுந்தது. இதில் படுகாயம் அடைந்த  வேளாங்கண்ணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லாரி புகுந்ததால் வீ்ட்டின் முன்பகுதி சேதம் அடைந்தது. இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story