அம்மன் கோவிலில் தங்க காசுகள் திருட்டு


அம்மன் கோவிலில் தங்க காசுகள் திருட்டு
x
தினத்தந்தி 3 May 2022 11:34 PM IST (Updated: 3 May 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே அம்மன் கோவிலில் தங்க காசுகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம்

திண்டிவனத்தை அடுத்த வெள்ளிமேடு பேட்டை அருகே உள்ள வைரபுரம் கிராமத்தில் எயிலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி குப்புசாமி(வயது 65) நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு குப்புசாமி அதிர்ச்சி அடைந்தார். 

உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க காசுகள், ஒரு கிராம் தங்க பொட்டு ஆகியோவற்றை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டது தெரியவந்தது. இதன்மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க காசுகளை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story