கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு


கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
x
தினத்தந்தி 3 May 2022 11:36 PM IST (Updated: 3 May 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

திருவலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

திருவலம்

வேலூர் மாவட்டம் திருவலத்தை அடுத்த கண்டிப்பேடு அருகே உள்ள ஒட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சாலமன் ராஜா (வயது 65), விவசாயி. இவர் அந்த பகுதியில் இறந்த பெண் ஒருவரின் இறுதி சடங்கிற்கு நேற்று சென்று திரும்பினார். 

பின்னர் கை, கால்களை கழுவ அங்குள்ள விவசாய கிணற்றில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.

இதை அறியாத குடும்பத்தினர் அவரைத்தேடி உள்ளனர். இந்த நிலையில் இன்று சாலமன் ராஜா அப்பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடப்பதாக அதனை பார்த்தவர்கள், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து காட்பாடி தீயணைப்புத்துறையினர் வந்து கிணற்றில் இருந்து பிணத்தை மீட்டனர்.  

பின்னர் திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வன் மற்றும் போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story