சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 66½ லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் ஏலம்
சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.66½ லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
நொய்யல்,
ஒழுங்கு முறை விற்பனை கூடம்
நொய்யல் அருகே அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சாலைப்புதூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றிய விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய், தேங்காய் பருப்பு
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 61.27½ குவிண்டால் எடை கொண்ட 19 ஆயிரத்து 922 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.28.25-ம், குறைந்தபட்ச விலையாக ரூ.24.69-ம், சராசரி விலையாக ரூ.26.55-ம் என ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 698-க்கு விற்பனையானது.அதேபோல் 197.56 குவிண்டால் எடை கொண்ட 429 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.87.61-க்கும், சராசரி விலையாக ரூ.88.85-க்கும் மற்றும் 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.88.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.59-க்கும், சராசரி விலையாக ரூ.86.65-க்கும் என மொத்தம் ரூ.17 லட்சத்து 18 ஆயிரத்து 988-க்கு விற்பனையானது.
எள்
440.85 குவிண்டால் எடை கொண்ட 589 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.119.49-ம், குறைந்தபட்ச விலையாக ரூ.104.19-ம், சராசரி விலையாக ரூ.110.99-ம் மற்றும் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.113.99-ம், குறைந்தபட்ச விலையாக ரூ.92.60-ம், சராசரி விலையாக ரூ.110.99-ம் மற்றும் வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.109.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.106.63-க்கும், சராசரியாக ரூ.109.59-க்கும் என மொத்தம் ரூ.47 லட்சத்து 73 ஆயிரத்து 201-க்கு ஏலம் போனது.
சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.66 லட்சத்து 49 ஆயிரத்து 887-க்கு வேளாண் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
Related Tags :
Next Story