விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேத்துப்பட்டு
கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 63). இவர் பெரிய தெருவில் வசித்து வந்தார். விவசாயியான இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர், நிலத்துக்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.
இதனால் திடீரென மயங்கி விழுந்த அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story