சாத்தனூரில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


சாத்தனூரில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 4 May 2022 12:02 AM IST (Updated: 4 May 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

சாத்தனூரில் கபடி போட்டி நடைபெற்றது.

காரையூர்:
காரையூர் அருகே உள்ள சாத்தனூரில் சிறுவருக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை மற்றும் காரையூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 36 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டியினை அரசமலை ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தொடங்கி வைத்தார். போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது .இதில் முதல் பரிசை காயாம்பட்டி அணியினரும், இரண்டாம் பரிசை திருக்களம்பூர் அணியினரும், மூன்றாம் பரிசை மனமேல்பட்டி அணியினரும், நான்காம் பரிசை புதுக்கோட்டை லேனா விலக்கு அணியினரும் பெற்றனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை காரையூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Next Story