மாஞ்சோலை வனப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் திருட்டு
மாஞ்சோலை வனப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் திருட்டு போனது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பை:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பல்வேறு வன உயிரினங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் உள்ளன. இந்த வனப்பகுதியில் வன உயிரினங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும் வனத்துறை சார்பில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் அமைந்துள்ள காக்காச்சி பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த 2 தானியங்கி கேமராக்கள் திருட்டு போய் உள்ளன. இதுகுறித்து களக்காடு வனத்துறையினர் கொடுத்த புகாரின் பேரில், கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story