கள்ளக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரியில் சிறப்பு விற்பனை


கள்ளக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரியில் சிறப்பு விற்பனை
x
தினத்தந்தி 4 May 2022 12:15 AM IST (Updated: 4 May 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அட்சய திருதியையொட்டி கள்ளக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரியில் சிறப்பு விற்பனை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உஷா சில்க் ஹவுஸ் எதிரே புதிய இடத்தில் புதுப்பொலிவுடன் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரியில் அட்சய திருதியையையொட்டி சிறப்பு விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. அட்சய திருதியை நாளான நேற்று கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயப்பாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கம், வெள்ளி நகைகளை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து நகைக்கடையின் உரிமையாளர் ரவி கூறுகையில், எங்கள் ஷோரூமில் 916 ஹால்மார்க் நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியையை யொட்டி வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கத்திற்கும் ஒரு கிராம் வெள்ளி காசு இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சலுகை  31.12.2022 வரை உள்ளது. 

மேலும் வெள்ளி கொலுசு, வெள்ளி பாத்திரங்கள், இடுப்பு கொடிகளுக்கு செய்கூலி சேதாரம் இல்லாமலும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர எங்களது ஷோரூமில் நியூ அக்சயா சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அட்சய திருதியையையொட்டி இச்சிறுசேமிப்பு திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டாம் மாதத் தவணை இலவசம். இச்சலுகை இந்த வருடம் முழுவதும் உள்ளது என்றார். 

Next Story