விஷம் குடித்த இளம்பெண் சாவு


விஷம் குடித்த இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 4 May 2022 12:34 AM IST (Updated: 4 May 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

கரு கலைந்ததால் கணவன் தகராறு செய்ததால் விஷம் குடித்த இளம்பெண் தற்கொலை

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் கொண்டகிந்தனப்பள்ளி சக்கரையப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சென்னையன். 

இவரது மகள் தமிழ்செல்விக்கும் (வயது 22) நாட்டறம்பள்ளியை அடுத்த திரியாலம் பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் சென்றாயசாமிக்கும்‌ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. சென்றாயசாமி ேபாச்சம்பள்ளி பகுதி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தமிழ்ச்செல்வி கடந்த 2 மாதத்திற்கு முன்பு 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென கரு கலைந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது 

அதன்பின் தமிழ்ச்செல்வி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் 22 ம் தேதி மீண்டும் சென்றாயசாமி செல்போனில் தனது மனைவியிடம் எப்படி கரு கலைந்தது என கேட்டபோது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. 

தமிழ் செல்வி பற்றி அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
 இதனால் தமிழ்செல்வி வாழ்க்கையில் விரக்தியடைந்து விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். 


வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டபின் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் மீண்டும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வி இறந்து விட்டார். இது குறித்து சகோதரர் முனிரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வழக்குப்பதிவு செய்தார்.

திருமணமாகி ஒரு வருேம ஆவதால் தமிழ்ச்செல்வி இறப்பு குறித்து திருப்பத்தூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை செய்து வருகிறார். 

Next Story