சங்கராபுரம் ஊராட்சியின் மின்கட்டண பாக்கி ரூ.36 லட்சம்
சங்கராபுரம் ஊராட்சி நிர்வாகம் மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி ரூ.36 லட்சம்
காரைக்குடி,
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி என்.ஜி.ஓ. காலனியில் வசிப்பவர் ஆதிஜெகன் நாதன். ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான இவர் சமூக ஆர்வலர் ஆவார். இவர் சங்கராபுரம் ஊராட்சி நிர்வாகம் மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி தொகை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது தகவல் அலுவலரிடம் கேட்டிருந்தார். அதற்்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மின்சார வாரிய பொது தகவல் அலுவலர் கூறியிருப்பதாவது, 29.12.2021-ம் தேதி நிலையில் சங்கராபுரம் ஊராட்சி மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி ரூ. 18 லட்சத்து 94 ஆயிரத்து 556. நடப்பாண்டில் ஏப்ரல் 1 -ந் தேதி நிலையில் சங்கராபுரம் ஊராட்சி மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டண மொத்தபாக்கித் தொகை ரூ. 35 லட்சத்து 71 ஆயிரத்து 846. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story