கணவரை தாக்கிய மனைவி மீது வழக்கு
பழவூர் அருகே கணவரை தாக்கிய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வடக்கன்குளம்:
பழவூர் அருகே கன்னங்குளத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி மகன் கனகராஜ் (வயது 36). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி நமீதா (27). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நமீதா, அருகில் கிடந்த கட்டையை எடுத்து கனகராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயம் அடைந்த கனகராஜ் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story