101 மையங்களில் 23,183 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்


101 மையங்களில் 23,183 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 4 May 2022 1:00 AM IST (Updated: 4 May 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. 101 மையங்களில் 23,183 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

விருதுநகர், 
பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. 101 மையங்களில் 23,183 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். 
பிளஸ்-2 தேர்வு 
பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை)  தமிழகம் முழுவதும் தொடங்குகிறது. மே 28-ந் தேதி நிறைவடைகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 101 மையங்களில் 218 பள்ளிகளை சேர்ந்த 23,183 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
பிளஸ்-1 தேர்வு மே 10-ந் தேதி தொடங்கி மே 31-ந் தேதி நிறைவடைகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வினை 101 தேர்வு மையங்களில் 219 பள்ளிகளை சேர்ந்த 24,491 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மே 6-ந் தேதி தொடங்கி மே 30-ந் தேதி நிறைவடைகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இத்தேர்வினை 115 மையங்களில் 359 பள்ளிகளை சேர்ந்த 26,933 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
பறக்கும் படை 
பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு குடிநீர் வசதி, போக்குவரத்து துறை மூலமாக தேர்வு மையங்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகள்,   தடையில்லாமல் மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் மாணவர்களை கண்காணிப்பதற்காக பள்ளிக்கல்வி துறையின் மூலமாக பறக்கும்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் மூலமாக வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள், தேர்வு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் ஆகிய இடங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் கண்காணிப்பு கேமராவுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கண்காணிப்பு அதிகாரி 
 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத ஆசிரியர்கள் தேவையான அளவு நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுத்தேர்விற்கு கண்காணிப்பு அதிகாரியாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அமுதவல்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
 இவர் ஏற்கனவே தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடத்தி தேர்வு விதிமுறைகளை பின்பற்ற அதற்கான கையேட்டினை வழங்கி முறையாக தேர்வு மையங்களில் விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

Next Story