கோவிலில் பணம் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவிலில் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி போலீசார் சரகத்தை சேர்ந்தது அயன் கரிசல்குளம். இங்கு ஊமை கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைரமுத்து (வயது 56) என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று கோவில் பீரோவில் ரூ.20,738-யை வைத்து பூட்டி சென்றார். பின்னர் மறுநாள் வந்து பார்த்த போது பீரோ கம்பியால் உடைக்கப்பட்டு கிடப்பதையும், அதில் இருந்த பணத்தை திருடி சென்றதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா, அதற்கான பிளேயரையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வைரமுத்து அளித்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story