16 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
நாகையில் சாராய விற்பனையை கைவிட்டு திருந்தி வாழும் 16 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
நாகப்பட்டினம்
நாகை ஆயுதப்படை வளாகத்தில், போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில் போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்த நாடகம், தப்பாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை நடைபெற்றது.
மேலும் சாராய விற்பனையை கைவிட்டு தற்போது மனம் திருந்தி வாழும் 16 பேருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.4.80 லட்சம் மதிப்பில் தையல் எந்திரங்கள், ஆடு, மாடு, கோழி மற்றும் பெட்டிக்கடை வைக்க உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பேச்சுப்போட்டி
மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. ேபாட்டிகளில் முதல், மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story