ரம்ஜான் சிறப்பு தொழுகை


ரம்ஜான் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 4 May 2022 1:48 AM IST (Updated: 4 May 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ராஜபாளையம்,
மாவட்டம் முழுவதும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 
ராஜபாளையம் 
ராஜபாளையத்தில் புனித ரமலான் திருநாளையொட்டி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சிறப்பு தொழுகை நடைபெறவில்லை. இந்த ஆண்டு அரசு அனுமதி வழங்கியதை அடுத்து சம்மந்தபுரத்தில் இருந்து இஸ்லாமிய கொடியை ஏந்தியபடி, இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வந்தனர்.  இந்த ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகம் வழியாக வந்து, முடங்கியாறு சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் நிறைவடைந்தது. மைதானத்தின் வாசலில் இருந்த கம்பத்தில் கொடியை ஏற்றிய பின்னர் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் 1,500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
அருப்புக்கோட்டை 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அருப்புக்கோட்டை கிளை சார்பாக ரம்ஜான் சிறப்பு தொழுகை காட்டு பாவா தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் பீர் கலந்து கொண்டு பெருநாள் உரையாற்றினார். சிறப்பு தொழுகையில் நூற்றுக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். 
காரியாபட்டி 
காரியாபட்டி முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் சார்பாக ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் பஸ் நிலையத்திலிருந்து பஜார் வழியாக ஊர்வலமாக சென்று ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர். 
புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். காரியாபட்டி பாண்டியன் நகர் மஜ்ஜிதே நூர் ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. அதேபோல தவ்ஹீத் ஜமாத் சார்பாக சிறப்பு தொழுகை நடந்தது. அதேபோல மாவட்டம் முழுவதும் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

Next Story