அரசு பஸ்-கார் மோதல்; பயிற்சி டாக்டர் பலி


அரசு பஸ்-கார் மோதல்; பயிற்சி டாக்டர் பலி
x
தினத்தந்தி 4 May 2022 1:53 AM IST (Updated: 4 May 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்-கார் மோதலில் பயிற்சி டாக்டர் பலியானார்

திருப்புவனம், 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முல்லைத்தெரு, வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு டாக்டர் சண்முகம் மதுரை வந்து விட்டு காரில் சிவகங்கை நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கையில் இருந்து மதுரைக்கு அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. படமாத்தூர் கண்மாய் அருகே வந்த போது, பயிற்சி டாக்டர் ஓட்டி வந்த காரும், அந்த பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் காரை ஓட்டி வந்த டாக்டர் சண்முகம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story