பா.ஜனதா அரசு மீது டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு


பா.ஜனதா அரசு மீது டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 May 2022 2:53 AM IST (Updated: 4 May 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கல்வித்துறை உள்பட அனைத்து துறைகளிலும் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் கல்வித்துறை உள்பட அனைத்து துறைகளிலும் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வேற்றுமையில் ஒற்றுமை

இன்று(நேற்று) பசவண்ணர் பிறந்த தினம். அவர் காட்டிய வழியில் நாம் நடக்க வேண்டும். அதே போல் ரமலான் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. சமுதாயத்தின் அமைதிகாக இஸ்லாமிய மக்களுடன் சேர்ந்து நானும் தொழுகை நடத்தினேன்.

வேற்றுமையில் ஒற்றுமை தான் நமது நாட்டின் மிகப்பெரிய பலம். இஸ்லாமிய மக்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்கள் அனுபவித்த வேதனைகள் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் உணர்வுகள், வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

முழுமையாக விசாரணை

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்தேர்வு முறைகேடு புகாரால் நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறை, கல்வித்துறை என அனைத்து துறைகளிலும் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. இவ்வாறு முறைகேடுகள் நடந்தால் நேர்மையாக தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும். 

பணம் வாங்கியர்கள் யார் என்பதை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். முழுமையாக விசாரணை நடத்தாமல் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்தினால் அதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது. மாகடி தாலுகாவில் மட்டுமே ரூ.2 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும். 

மேகதாது திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி பெற்று திட்டத்தை செயல்படுத்துவதாக முதல்-மந்திரி கூறியுள்ளார். அவர் என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story