ஈரோட்டில் கடந்த மாதம் போக்குவரத்து விதிகளை மீறியதாக 7,619 வழக்குகள் பதிவு; ரூ.3¼ லட்சம் அபராதம் வசூல்


ஈரோட்டில் கடந்த மாதம் போக்குவரத்து விதிகளை மீறியதாக 7,619 வழக்குகள் பதிவு; ரூ.3¼ லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 4 May 2022 3:01 AM IST (Updated: 4 May 2022 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 7 ஆயிரத்து 619 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு
ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 7 ஆயிரத்து 619 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 
போக்குவரத்து விதிகள்
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தவிர்க்கவும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி ஈரோடு தெற்கு, வடக்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்கள், ஹெல்மெட் அணியாமலும், செல்போன் பேசியபடியும் என போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
7,619 வழக்குகள்
ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி சென்றதாக 5 ஆயிரத்து 588 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டியதாக 153 வழக்குகள், செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டியதாக 168 வழக்குகள், இருசக்கர வாகனங்களில் 3 பேர் சென்றதாக 198 வழக்குகள், போக்குவரத்து சிக்னலை மீறியதாக 136 வழக்குகள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டியதாக 69 வழக்குகள், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 30 வழக்குகள், அதிக வேகமாக வாகனங்களை இயக்கியதாக 34 வழக்குகள், அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றியதாக 7 வழக்குகள் உள்பட மொத்தம் 7 ஆயிரத்து 619 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில் வாகன ஓட்டிகளுக்கு ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


Next Story