மொடக்குறிச்சி அருகே குடும்ப தகராறு: குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு வடமாநில பெண் தற்கொலை


மொடக்குறிச்சி அருகே குடும்ப தகராறு: குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு வடமாநில பெண் தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2022 3:01 AM IST (Updated: 4 May 2022 3:01 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அருகே குடும்ப தகராறில் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு வடமாநில பெண் தற்கொலை செய்துகொண்டார்.

மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே குடும்ப தகராறில் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு வடமாநில பெண் தற்கொலை செய்துகொண்டார். 
ஒடிசா மாநிலத்தவர்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் புட்டுரன்சன்தாஸ் (வயது 30). இவருடைய மனைவி லிப்ட்டிமாயிபேரா (24). இவர்களுடைய மகள் சாய்ஸ்மித்ரிதாஸ் (5). 
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சாவடிப்பாளையம்புதூர் பகுதியில் புட்டுரன்சன்தாஸ் குடும்பத்துடன் தங்கிக்கொண்டு மாமனார் உபேந்திரநாத் பேராவுடன் எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்று வந்தார். 
இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி புட்டுரன்சன்தாஸ் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தார். அப்போது லிப்ட்டிமாயிபேரா சாப்பாடு சமைத்து வைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால்  புட்டுரன்சன்தாஸ் மனைவியை திட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டதாக தெரிகிறது. 
விஷம் குடித்தார்
இந்நிலையில் மாலையில் புட்டுரன்சன்தாஸ் வீடு திரும்பியபோது, மனைவி லிப்ட்டிமாயிபேராவும்,  குழந்தை சாய்ஸ்மித்ரிதாசும் வாந்தி எடுத்து கொண்டிருந்தார்கள். அப்போது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு லிப்ட்டிமாயிபேராவும் விஷம் குடித்துவிட்டது தெரிந்தது. உடனே  இருவரும் மீட்கப்பட்டு  மொடக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி லிப்ட்டிமாயிபேரா நேற்று இறந்தார். குழந்தை சாய்ஸ்மித்ரிதாசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
 இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story