வீரகவுண்டனூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மோதல்; 4 பேர் மீது வழக்கு
வீரகவுண்டனூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மோதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரகவுண்டனூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவர் அனுஷியா தலைமை தாங்கினார். அப்போது 4-வது வார்டு கவுன்சிலர் விஜயா, தனது வார்டில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறினார். இதைக்கேட்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் காந்தி (வயது 44) என்பவர் கவுன்சிலர் விஜயாவுடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை தாக்கினர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதிக்கொண்டனர். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே போல காந்தி கொடுத்த புகாரின் பேரில் கவுன்சிலர் விஜயா மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார், பழனிசாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story