சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி
சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம்:
சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுட்டெரித்த வெயில்
சேலம் மாவட்டத்தில் பகலில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 29-ந் தேதி முதல் நேற்று வரை வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், ெதாழிலாளா்கள் என பலதரப்பட்ட மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். மேலும் வெயில் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் பலர் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை.
இதனிடையே தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூரில் அதிகப்பட்சமாக 22.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதேபோல் எடப்பாடியில் 12.2 மில்லிமீட்டரும், சங்ககிரியில் 7.1 மில்லிமீட்டரும் பதிவாகி உள்ளன.
பலத்த மழை
இந்த நிலையில் நேற்று ேசலம் மாநகரில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. 100.4 டிகிரியாக வெயில் அளவு பதிவாகியது. இந்த நிலையில், மாலை 6 மணியளவில் திடீரென சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழை அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
மழையின் போது சூறாவளி காற்று வீசியதால் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு துணிக்கடையின் முன்பகுதியில் மேற்கூரையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் (சிமெண்டு கூரை) சரிந்து விழுந்தன. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. நேற்று பகலில் வெயிலினால் அவதிப்பட்ட பொதுமக்கள், மாலையில் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story