ஏற்காடு மலைப்பாதையில் 2 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள் அகற்றம்


ஏற்காடு மலைப்பாதையில் 2 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள் அகற்றம்
x
தினத்தந்தி 4 May 2022 4:59 AM IST (Updated: 4 May 2022 4:59 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காடு மலைப்பாதையில் 2 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள் அகற்றப்பட்டு உள்ளன.

சேலம்:
சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் கடந்த மாதம் 30-ந்தேதி, மாசு இல்லாத ஏற்காடு 2022- என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்படி ஏற்காடு மலைப்பாதையில் மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை சாலைகளில் போடக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள், போலீசார் மற்றும் தன்னார்வர்கள் கடந்த 3 நாட்களாக ஏற்காடு அடிவாரம் சாலையில் கிடந்த 500 மதுபான பாட்டில்கள், 2 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களை அகற்றி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, ஏற்காடு சுற்றுலா தளத்தை சுத்தமாக வைத்திருக்க ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும். எனவே சாலைகளில் மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்பொருட்களை வீசி செல்லக்கூடாது என்று கூறினர்.

Next Story