காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மலைக்கோட்டை:
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்ற நுழைவு வாயில் அருகே நேற்று காங்கிரஸ் கட்சியினர், மாநில பொதுச்செயலாளர் வக்கீல் எம்.சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த மாதம் 17-ந்தேதி அன்று அருணாச்சல மன்றத்தில் தியாகி கக்கன் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து நாங்கள் சென்ற பின்னர், கக்கனின் உருவப்படத்தை மாவட்ட தலைவர் ஜவஹர் கழற்றி எறிந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த சம்பவத்தில் உடனடியாக மாநில தலைவர் அழகிரி தலையிட்டு, மாவட்ட தலைவர் ஜவஹரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதில் கட்சிைய ேசர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மீண்டும் கக்கனின் உருவப்படத்தை மாலைக்குள் வைக்கவில்லை என்றால் இன்று(புதன்கிழமை) காலை முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story