பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
துவரங்குறிச்சி:
துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் கிருஷ்ணன்(வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அருகில் உள்ள செட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளையம்மாளிடம் ராமலிங்கம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து கிருஷ்ணனை வெள்ளையம்மாளின் ஆண் நண்பர் பச்சமுத்து அரிவாளால் வெட்டினார். இதில் கிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சமுத்து, வெள்ளையம்மாள் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரின் பரிந்துரையின்பேரில் வெள்ளையம்மாள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். அதற்கான நகலை திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெள்ளையம்மாளிடம் துவரங்குறிச்சி போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story