திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் மாயம்


திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் மாயம்
x
தினத்தந்தி 4 May 2022 5:02 AM IST (Updated: 4 May 2022 5:02 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் மாயமானார்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள கீழக்கோரைபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 39). தையல் தொழிலாளியான இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா காக்காயமேடு பகுதியை சேர்ந்த ரேவதிக்கும்(19) கடந்த 29-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து ரேவதியை காணவில்லை என்று பழனிச்சாமி வளநாடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story