சமயபுரம்:
மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் நேற்று திருவெள்ளறை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கடைவீதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கோவை அருகே உள்ள எட்டிமடை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாரின் மகன் நவீன்குமார்(வயது 25) என்பதும், திருவெள்ளறை கடைவீதியில் வசித்து வரும் நடராஜனின் மனைவி சுமதியிடம் 4½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்றதும், திருவெள்ளறை கடைவீதியில் உள்ள ஒரு மெட்டல் நிறுவனத்தில் மடிக்கணினியை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.