மாரியம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா
மாரியம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடந்தது.
முசிறி:
முசிறியில் சித்திரை மாதத்தை முன்னிட்டு நகரில் உள்ள மாரியம்மன் கோவில்களில் கடந்த 10 நாட்களாக பால்குடம் நிகழ்ச்சி, பூச்சொரிதல் விழா நடைபெற்றது. கள்ளர்தெருவில் உள்ள கோவிலில் நேற்று அம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் தீமிதி விழாவையொட்டி கள்ளர்தெரு மகா மாரியம்மன், மேலத்தெரு மகா மாரியம்மன், கீழத்தெரு மகா மாரியம்மன் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் மதநல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் பறைசாற்றுகின்ற விதமாக தீமிதி திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு, பள்ளிவாசல் முன்பு முஸ்லிம்கள் சார்பில் நீர்மோர், பானகம் வழங்கியது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story