மாநில கூடைப்பந்து போட்டி


மாநில கூடைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 4 May 2022 6:02 AM IST (Updated: 4 May 2022 6:02 AM IST)
t-max-icont-min-icon

மெட்டாலா லயோலா கல்லூரியில் மாநில கூடைப்பந்து போட்டி நடந்தது.

ராசிபுரம்:-
ராசிபுரம் அருகே மெட்டாலா லயோலா கல்லூரியில் 2-வது மாநில அளவிலான விக்டர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி நடந்தது. கல்லூரி செயலாளர் போனிபஸ் ஜெயராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மரிய ஜோசப் மகாலிங்கம் போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 16 கல்லூரிகளும், 7 பள்ளிகளும் போட்டியில் கலந்து கொண்டன. திருச்செங்கோடு தொழிலதிபர் பி.ஆர்.டி. பரந்தாமன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். சேலம் முருகப்பா எலக்ட்ரிகல்ஸ் வேல்முருகன் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார்.
கல்லூரி அணிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை லயோலா கல்லூரி அணி ரூ.10 ஆயிரம் முதல் பரிசை பெற்றது. 2-வது பரிசு ரூ.7 ஆயிரத்தை திருச்சி தூய வளனார் கல்லூரியும், 3-வது பரிசு ரூ.5 ஆயிரத்தை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும், மெட்டாலா லயோலா கல்லூரி 4-வது பரிசு ரூ.2 ஆயிரத்து 500-ஐ பெற்றது.
அதேபோல் பள்ளிகளுக்கான போட்டியில் மன்னார்குடி நேஷனல் மேல்நிலைப்பள்ளி ரூ.10 ஆயிரம் முதல் பரிசையும், சுழற்கோப்பையையும் வென்றது. தேனி சரஸ்வதி நாடார் மேல்நிலைப்பள்ளி 2-வது பரிசு ரூ.7 ஆயிரத்தை பெற்றது. சேலம் ஏ.என்.மங்களம் மேல்நிலைப்பள்ளி 3-ம் பரிசு ரூ.5 ஆயிரத்தை வென்றது. சேலம் எமரல்ட் மேல்நிலைப்பள்ளி 4-ம் பரிசான ரூ.2 ஆயிரத்தை 500- ஐ பெற்றது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் கல்லூரி பொருளாளர் ஜேம்ஸ் ராஜா, உடற்கல்வி இயக்குனர் ஆண்ட்ரூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story