புதன் சந்தையில் மாடுகள் விலை சரிவு
புதன் சந்தையில் மாடுகள் விலை சரிந்தது.
சேந்தமங்கலம்:-
சேந்தமங்கலம் அருகே புதன் சந்தை நேற்று வழக்கம் போல கூடியது. நேற்று ரமலான் பண்டிகை நாளாக இருந்ததால் கேரளாவில் இருந்து வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. இதனால் மாடுகளின் விலை சரிந்து காணப்பட்டது. கடந்த வாரம் ரூ.20 ஆயிரத்துக்கு விற்ற பசுமாடு, இந்த வாரம் ரூ.19 ஆயிரத்திற்கும், ரூ.30 ஆயிரத்திற்கு விற்ற எருமை மாடு இந்த வாரம் ரூ.28 ஆயிரத்திற்கும், ரூ.10 ஆயிரத்துக்கும் விற்ற கன்று குட்டிகள் ரூ.9 ஆயிரத்திற்கும் விற்பனையானது. ஒவ்வொரு வாரமும் ரூ.3 கோடி அளவில் வியாபாரம் நடக்கும். ஆனால் சந்தையில் நேற்று ரூ.1½ கோடிக்கு மட்டுமே விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
Related Tags :
Next Story