புதுமாரியம்மன் கோவில் தீமிதி விழா


புதுமாரியம்மன் கோவில் தீமிதி விழா
x
தினத்தந்தி 4 May 2022 6:03 AM IST (Updated: 4 May 2022 6:03 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் பேட்டை புதுமாரியம்மன் கோவில் தீமிதி விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பரமத்திவேலூர்:-
பரமத்திவேலூர் பேட்டை புது மாரியம்மன் கோவில் பூக்குண்டம் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த‌ பூக்குண்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் தீ மிதித்தும், பெண் பக்தர்கள் பூ வாரி போடும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு சிங்க வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று (புதன்கிழமை) காலை பக்தர்கள் அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மாலையில் பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல், இரவு ஊஞ்சல் உற்சவம் ஆகியன நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், இரவு சப்பரத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Next Story