சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 4 May 2022 6:03 AM IST (Updated: 4 May 2022 6:03 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

திருப்பூர், ஏப்.4-
திருப்பூர் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று குமரன் ரோட்டில் உள்ள மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாநில தலைவர் கலா தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் முருகேசன், கோரிக்கைகள் குறித்து பேசினார். முன்னாள் மாநில தலைவர் பழனிச்சாமி வாழ்த்தி பேசினார். மாநில துணை தலைவர் பெரியசாமி, முன்னாள் மாநில செயலாளர் சக்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முடிவில் பொதுச்செயலாளர் மலர்விழி, பொருளாளர் கருணாகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
காலமுறை ஊதியம், ஓய்வூதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் அறிவிக்க வேண்டும் என்றும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உதவியாளர் பதவி உயர்வு, பணியிடமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக வருகிற 11-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் பணி நிறைவு பெற்ற சங்க நிர்வாகிககளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Next Story