தாயை கொலை செய்து விட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவான குற்றவாளி போலீசில் சிக்கினார்


தாயை கொலை செய்து விட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவான குற்றவாளி போலீசில் சிக்கினார்
x
தினத்தந்தி 4 May 2022 7:27 AM IST (Updated: 4 May 2022 7:27 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் தாயை கொலை செய்து விட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவான குற்றவாளி அரும்பாக்கம் போலீசில் சிக்கினார்.

பூந்தமல்லி, 

அரும்பாக்கம் ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் மங்கைகரசி (வயது 57). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இவரது வீட்டிற்கு வந்த இவரது பேரன் சதீஷ்குமார் (23), என்பவர் சொத்தை விற்று பணம் தர வேண்டும் என தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மங்கைகரசி அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் மீது கொலை வழக்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், கிருஷ்ணகிரியில் சொத்து தகராறில் தனது தாய் பாக்கியலட்சுமியை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும், அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக சுற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்த போலீசார் கிருஷ்ணகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

சொத்து தகராறில் தாயை கொலை செய்து விட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் சொத்து தகராறில் பாட்டியிடம் தகராறு செய்த குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story