வாகனங்களில் விதிக்கு புறம்பான ஹாரன், சைலன்சர் பொருத்தம்: சென்னையில் 557 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு
சென்னையில் வாகனங்களில் விதிக்கு புறம்பான ஹாரன், சைலன்சர் பொருத்திய 557 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை,
சென்னையில் மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்கள், சைலன்சர்கள் பொறுத்தி பொதுமக்களுக்கும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், மோட்டார் வாகன விதிகளை மீறி காற்று ஒலிப்பான்கள் ஒலிப்பெருக்கி பயன்படுத்திய 163 வாகன ஓட்டிகள் மீதும், சைலன்சர்களை மாற்றி அமைத்த 103 வாகன ஓட்டிகள் மீதும், நம்பர் பிளேட்டுகளை விதவிதமான வடிவில் அமைத்திருந்த 291 வாகன ஓட்டிகள் மீது என மொத்தம் 557 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
வாகனங்களில் மோட்டார் வாகன சட்டத்தின்படி ஹாரன் மற்றும் நம்பர் பிளேட்டை வைத்திருக்க வேண்டும் என்றும், மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story