நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் - அமைச்சர் சக்கரபாணி பேட்டி
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் 169 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 25,717 ரேஷன் அட்டைகளும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 22,633 ரேஷன் அட்டைகளும் வழங்கப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு இருந்தது, அதுதொடர்பாக அங்கு வேலை பார்த்த எழுத்தர், உதவியாளர், காவலர் என 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story