எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 48 ஆயிரத்து 548 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 48 ஆயிரத்து 548 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 4 May 2022 12:14 PM IST (Updated: 4 May 2022 12:14 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை திருவள்ளூர் மாவட்டத்தில் 48 ஆயிரத்து 548 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்,

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்து, பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று நேரடியாக கல்வி கற்று வருகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் வருகிற 6-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 6-ந்தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை, தற்போது தேர்வு 3 தனித்தேர்வு மையங்கள் உள்பட 178 மையங்களில் நடைபெறுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை திருவள்ளூர் மாவட்டத்தில், 24 ஆயிரத்து 846 மாணவர்களும், 23 ஆயிரத்து 702 மாணவிகளும் என மொத்தம் 48 ஆயிரத்து 548 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

தேர்வு சுமூகமான முறையில் நடைபெறுவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story