கே.வி.குப்பம் அருகே மர்மவிலங்கு கடித்து ஆடுகள் பலி


கே.வி.குப்பம் அருகே மர்மவிலங்கு கடித்து ஆடுகள் பலி
x
தினத்தந்தி 4 May 2022 4:41 PM IST (Updated: 4 May 2022 4:41 PM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பம் அருகே மர்மவிலங்கு கடித்து ஆடுகள் பலியானது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் தாலுகா முடினாம்பட்டு கிராமத்தை அடுத்த மேல்விலாச்சூர் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகன் வெங்கடேசன். இவர் தனது வீட்டில் 2 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த ஆடுகள்  மர்மவிலங்கு கடித்துக் குதறி இறந்த நிலையில் கிடந்தன.

ஆடுகள் இறந்து கிடந்ததைப் பார்த்த வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், கிராம நிர்வாக அலுவலர் வினோத்திடம் புகார் செய்தார். மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியான சம்பவத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Next Story