நடராஜரின் நடனத்தை இழிவுபடுத்திய யூடியூப் சேனலை உடனடியாக தடை செய்ய வேண்டும்


நடராஜரின் நடனத்தை இழிவுபடுத்திய யூடியூப் சேனலை உடனடியாக தடை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 4 May 2022 5:33 PM IST (Updated: 4 May 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

நடராஜரின் நடனத்தை இழிவுபடுத்திய யூடியூப் சேனலை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

வேலூர்

இந்து தேசிய கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் சதீஷ்குமார், இந்து திருக்கோவில் கூட்டமைப்பு மண்டல நிர்வாக செயலாளர் சக்திவேல், சிவசக்தி சேனா இந்துமக்கள் இயக்க நிறுவன தலைவர் ராஜகோபால் குருஜி ஆகியோர் தலைமையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அதில், 

‘‘இந்து கடவுளான தில்லை சிதம்பர நடராஜரின் நடன தாண்டவத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசி யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளனர். எனவே அந்த யூடியூப் சேனலை உடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும் அதன் நிர்வாகியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெறும்’’ என்று கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Next Story