கீழ்பென்னாத்தூர் பகுதியில் திடீர் மழையால் ெபாதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி


கீழ்பென்னாத்தூர் பகுதியில் திடீர் மழையால் ெபாதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 May 2022 6:32 PM IST (Updated: 4 May 2022 6:32 PM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூர் பகுதியில் பெய்த மழைால் விசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் பகுதியில் பெய்த மழைால் விசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை தொடங்கும் முன்னரே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொளுத்தி வந்த வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். 
மாவட்டத்தில் அதிகபட்சமாக106டிகிரி அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. இதனால் ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாக வயதானவர்கள் பகலில் வெளியில் வராமல் வீட்டிலேயே மாலை வரை முடங்கி கிடந்தனர். 

இந்த நிலையில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கிய நிலையில் காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. 

மதியத்துக்கு மேல் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாலையில் கீழ்பென்னாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் திடீர் மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த மழை மணிலாவிற்கும் ஏற்றது என விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Next Story