மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாமாகுடி ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கும், போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருக்கடையூர்:
மாமாகுடி ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கும், போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாமாகுடி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் துரைராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாமாகுடி ஊராட்சியில் காலனி தெரு முதல் மெயின் ரோடு வரை தெருவிளக்கு அமைத்து கொடுத்தல், ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்க கோரியும், குடிநீர் பிரச்சினையை சரி செய்து தரவும், கல் ஓடை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பூந்தாழை, மாமாகுடி பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை உடனடியாக செப்பனிடவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வாக்குவாதம்
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர்கள், மாதர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி ஆணையர் மஞ்சுளா, பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, ஊராட்சி மன்ற தலைவர் விஜயாகோபிநாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வட்டார வளர்ச்சி ஆணையர் கூறினார். இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
--
Related Tags :
Next Story