பெயிண்டர் தற்கொலை
பெயிண்டர் தற்கொலை
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கீழ் கோத்தகிரி அண்ணநகரை சேர்ந்தவர் வினோத்(வயது 34). பெயிண்டர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், கூடலூர் பகுதியை சேர்ந்த சபீனா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.இதற்கிடையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த வாரம் சபீனா கோபித்துக்கொண்டு கூடலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இதனால் மனமுடைந்த வினோத், அளவுக்கு அதிகமாக மது குடிக்க தொடங்கினார்.
இந்தநிலையில் நேற்று மதியம் கீழ்கோத்தகிரி வனத்துறை அலுவலகம் அருகே உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story