மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
கூடலூர்
மலப்புரம் மாவட்டம் எடக்கராவை சேர்ந்தவர் லத்தீப். இவரது மகன் முகமது ஜெய்ஷல்(வயது 24). இவர், அதே பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவரது மகன் சபிபுல்லா(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை சபிபுல்லா ஓட்டினார். கேரளா-கூடலூர் மலைப்பாதையில் கீழ் நாடுகாணியில் நேற்று இரவு 10 மணியளவில் வந்தபோது, எதிரே கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளா நோக்கி சென்ற சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கியதால் முகமது ஜெய்ஷல், சபிபுல்லா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை சக வாகன ஓட்டிகள் மீட்டு நிலம்பூர் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முகமது ஜெய்ஷல் பரிதாபமாக பலியானார். தொடர்ந்து சபிபுல்லாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story