விழா மேடை, அரங்குகள் அமைக்கும் பணி மும்முரம்
கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியைெயாட்டி விழா மேடை, அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி
கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியைெயாட்டி விழா மேடை, அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காய்கறி கண்காட்சி
நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழாவை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் வருகிற 7-ந் தேதி மற்றும் 8-ந் தேதி காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக பூங்காவில் சுமார் 30 ஆயிரம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி நடந்தது. மேலும் செயற்கை நீரூற்று அமைக்கும் பணி, வர்ணம் பூசும் பணி, கழிப்பிடம் புதுப்பிக்கும் பணி, புல்தரைகளை வெட்டி சமப்படுத்தும் பணி என பூங்காவை மேம்பாட்டு பணிகள் கடந்த 2 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்தநிலையில் காய்கறி கண்காட்சி நடத்துவதற்காக விழா மேடை அமைக்கும் பணி மற்றும் அரங்குகள் அமைக்கும் பணி கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
20 அரங்குகள்
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா கூறியதாவது:-
காய்கறி கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பல டன் எடை கொண்ட காய்கறிகளை பயன்படுத்தி ஒரு பிரமாண்ட காய்கறி சிற்பமும், 4 சிறிய அளவிலான காய்கறி சிற்பங்களும், 20 கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.
இது மட்டுமின்றி விழா மேடையும் அமைக்கப்படுகிறது. 2 நாட்களும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக விழா மேடையில் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காய்கறி கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டு கண்காட்சியை கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story