மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு
குன்னூர்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி, ஊட்டியில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா, குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கமல் குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட கல்வி அலுவலர் புனிதா கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். குன்னூர் நகர மன்ற கவுன்சிலர் மன்சூர் கேடயம் வழங்கினார். முன்னாள் மாணவர் சங்கத்தினர் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு எழுதுபொருட்களை வழங்கினர். அவர்களுக்கு, சிறந்த பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியை ஞானசுந்திரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story