மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 May 2022 7:41 PM IST (Updated: 4 May 2022 7:41 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோத்தகிரி

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்கெட் திடலில் இன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி அசோக் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், நீலமலை அனைத்து தொழிலாளர் சங்க வாகன பிரிவின் தலைவர் சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டார தலைவர் மணி, ரத்த தான நண்பர்கள் குழு செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் டீசல் கேஸ் விலையை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.450-க்கு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் வெங்கடேஷ் நன்றி கூறினார்.


Next Story